- "சிந்தனைச் செல்வி" ரா. புஷ்பவல்லி
காளியே! பெரும் நீலியே! துர்கையே!
உள்ளார்ந்த காளியே! உலகளந்த காளியே!
ஆங்காரமாய் வந்தாயே ஆணவத்தை கொன்றாயே,
பலிபீடம் கொண்டு பாவத்தை தொலைத்தாயே,
பத்திரகாளி அம்மா பராசக்தி தாயே அம்மா,
ஆலயம் கொண்டு அகிலத்தை ஆள்பவளே
சூலாயுதம் கொண்டு சூறாவளியாய் வந்தாயே!
பகலவனை கையில் ஏந்தி,
பாங்கு உடனே காப்பவளே,
ஆயிரம் கண்கொண்டு அச்சத்தை போக்கினாய்,
அஞ்சாமல் பிழை செய்வோரை அடியோடு அழிப்பவளே,

ஆழிக்கடலில் அங்காள பரமேஸ்வரியாய்
அமைதியாய் உரு கொண்டாயே,
அடியாளும் உனை வணங்குகிறேன்,
வந்தென்னை ஆட்கொள்வாயே,
குங்குமத்தில் சிவந்தாயே, மஞ்சளுக்கு மயங்கினாய், வேப்பிலைக்காரியே
வேண்டும் வரம் தருவாயே,
பச்சை புடவைக்காரியே பாங்குடனே வந்தாயே,
ஈரத்துணியோடு மண்ணில் உருண்டு
உன்னை வணங்குகிறோம்,
அடிவயிறு கலங்காமல் அன்னமிடு தாயே!
சேத்து மகாகாளியே பருவத்து மங்கைகளை
மனம் கொண்டு காத்து அருள்வாய்:
செல்லாத்தா நீ செல்லும் இடமெல்லாம்
செழித்து வளர செய்தாயே,
புற்றுக்காளியாம் நீ- கருநாகமாய் வந்தாயே!
பெரும் நஞ்சை அழித்தாயே!
புற்றுக்கு கண்ணாக பூவுலகிற்கு வந்தாயே
உன்னை சுற்றி வரும் எங்களுக்கு
மண்ணே மருந்தாக வரம்கொடுதாயே,
காளி மகா தாயே...!
(ரா. புஷ்பவல்லி. சேலத்தைச் சேர்ந்த இல்லத்தரசி, தையல் கலை நிபுணர், கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் மற்றும் சிற்ப ரசனையாளர்)
உன் இதழ்களின் மென்மையால்..!
காளி வரம்
Saturday Vibes: எனக்கு ஏனோ உன் ஞாபகம்!
திருப்பரங்குன்றம் கல்தூணில் நாளை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அறங்காவலர் குழு கலைப்பு
பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு : முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் நடத்த தடையில்லை ; 3 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு
தொகுதி மறு வரையறை: நாளை திமுக எம்.பி.,க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
Chettinadu Recipes: சுவையான ருசியில்.. செட்டிநாடு ஸ்பெஷல் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி
{{comments.comment}}