ராயன் படம் சூப்பர்.. ஸ்வீட் எடு.. கொண்டாடு.. பட்டைய கிளப்பும் தியேட்டர்கள்.. பரவசத்தில் ரசிகர்கள்! ‌

Jul 26, 2024,05:14 PM IST

சென்னை: நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் விமர்சனம் நன்றாக வந்து கொண்டிருப்பதால், இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் தனுஷ். ஆரம்பகால கட்டத்தில் தோற்றத்தை வைத்து பலரும் நிராகரித்த நிலையில் தனது நடிப்பின் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்பை நிலை நாட்டியவர். இவர் ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு பாடகனாக இயக்குனராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக என பல திறமைகளை தன்னகத்தே கொண்டு பல தோற்றங்களாக பிரதிபலிக்கிறார். இப்படி தனுஷ் நடித்த படங்களில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.




அந்த வகையில் தனுஷே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். ஜூலை 28ஆம் தேதி இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியாகி அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதில் பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


படம் இன்று காலை வெளியானது. படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் வெடி வெடித்து, ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். தியேட்டர்களில் ஆட்டம் பாட்டமாக உள்ளது. சென்னையில் ரோகினி திரையரங்கிகளில் ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டம் பட்டைய கிளப்பியது. இதில் நடிகர் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களைக் காண திரளான ரசிகர்கள் தலைவா தலைவா என கோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சிகளை தெரிவித்தனர். 


இது மட்டுமல்லாமல் ராயன் படத்தை பார்த்த தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கு தம்பி எனவும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்