- ராதா ஜானகிராம்
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார் என்றால் நாத்திகர் (கடவுள் நம்பிக்கை மறுப்பாளர்) என பெரியவர்கள் கூறி நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றுலிருந்தே பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக எண்ணி இருந்தேன். பின் வந்த நாட்களில் நான் படித்த பெரியார் பற்றிய புத்தகங்கள் மூலம் பெண்கள் பெரியாரால் நிறையவே பலன் அடைந்துள்ளனர். என புரிந்து கொண்டேன்.
பொதுவாக அந்த காலத்தில் பெண்கள், 1.ஜாதி கொடுமை. 2.ஆணாதிக்கம் 3. கல்வி மறுப்பு 4. பேச்சு உரிமை இன்மை . 5. முடிவு எடுக்கும் உரிமை கிடையாது. 6. வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது 7. நினைத்த உடை அணிய உரிமை கிடையாது. இது போல் எண்ணில் அடங்கா துன்பங்களை அனுபவித்து உள்ளனர்.
அந்தக் காலத்தில், "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு ? " என்பது பரவலான கருத்து. அந்த காலக்கட்டத்தில் பெண் முன்னேற்றத்துக்காக அதிக குரல் கொடுத்தவர் பெரியார், பாரதியார், பாரதி தாசன் போன்ற சான்றோர் பெருமக்கள்.
தற்காலத்தில் பெண்கள் பெரியார் கனவு கண்ட பெண்களாகவும், பாரதி யின் புதுமை , புரட்சி பெண் ஆகவும் திகழ்கிறார்கள். காரணம் அவர்களுக்கு கிடைத்த கல்வி, மற்றும் சுய வேலைவாய்ப்பு. மிக்க மகிழ்ச்சி. ஆனால் பெண்கள் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதும் கசப்பான உண்மைதான்.

அவர்களின் உழைப்பு அவர்கள் குடும்பத்தாராலேயே சுரண்டப்படுகிறது. அவர்களின் ஆரோக்கியம் அவர்கள் குடும்பத்தாராலேயே அழிக்கப்படுகிறது. எவ்வாறு எனில் , பாரதி கனவு கண்ட புதுமை பெண்ணாய் படித்தாள். வாழ்க்கையில் உயர்ந்தாள். வேலை கிடைத்தது. விடுதலை கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தது. அவள் நினைத்த ஆடை உடுத்தினாள். ஆனால் அடுப்படியில் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.
பெரியார், பெண்ணே, சமையல் அறையை விட்டு வெளியே வந்து வெளி உலகை பார் என்றார். அனைத்தையும் சாதித்து, சாத்தியம் ஆக்கிய பெண்ணால் சமையல் அறையை விட்டு வெளியே வர முடியல. இப்போது இரட்டை வேலை செய்கிறாள். அலுவலகத்திலும் , வீட்டிலும் !!!!
இருசக்கர வண்டி ஓட்டி படித்தாள். வானூர்தி ஓட்டுவது போல் மகிழ்ந்தாள். இருசக்கர வாகனம் ஓட்டுவதால் தன் இரு குழந்தைகளையும் வண்டியில் வைத்து கொண்டு பள்ளி யில் கொண்டு போய் விடுகிறாள். சந்தைக்கு போய் காய்கறி வாங்குகிறாள். மறுபடியும் இரட்டை வேலை சுமக்கிறாள். ! இது தான் சுதந்திரமோ?
வெள்ளைகாரனிடம் அடிமை பட்டிருந்த நாம் தற்போது செல்போனில் அடிமைப்பட்டுள்ளோம். அது போல இன்னும் பெண் முழு சுதந்திரம் பெறவில்லை. படித்து பட்டம் வாங்கினாலும் , குடியரசு தலைவராகவே பதவி வகித்தாலும் வீட்டிலும் தனி ஆளாக உழைத்து கொண்டு வீட்டு உறுப்பினர்கள் சாப்பிட்டபின் மீதமான சத்து இல்லாத உணவுகளை உட்கொண்டு கடைசி வரை பிறருக்காகவே வாழ்கிறாள்.
ரொம்ப நாட்களாக மனதை உறுத்திய விஷயத்தை கொட்டியிருக்கிறேன். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வியில் உயர்நிலையை அடையும் என்றார் பாரதிதாசன். அத்தகைய பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திலும் கவனமாக இருந்தால் அந்த குடும்பம் மட்டும் அல்லாது இந்த நாடே பயன்பெறும்.
(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்1
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!
எனக்கு ஏன் பெரியாரைப் பிடித்தது?
என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!
My Companion: The Moon
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
{{comments.comment}}