அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா : ராகுல் காந்தி, பிரியங்காவிற்கு அழைப்பு இல்லை

Jan 04, 2024,01:29 PM IST

லக்னோ : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிர்பேந்திர மிஷ்ரா சார்பில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் சோனியாவிற்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவிற்கு அழைப்பு கிடையாது.


முக்கிய கட்சிகளின் தலைவர்கள், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர்கள், 1984 முதல் 1992 வரை ராமர் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அழைத்துள்ளார். 2014 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால் யாரும் அழைக்கப்படவில்லை. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் செளத்ரியின் வீட்டிற்கே சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.


முக்கிய கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் விரைவில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ராமர் கோவில் கட்டுவதற்காக போராடியவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்காவும் விழாவிற்கு அழைக்கப்படாததற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக.,வின் அழுத்தமே காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் மிலித் பரண்டே, பகவான் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். இதில் எந்த பாகுபாடும் பேதமும் கிடையாது. இதை அரசியல் விழாவாக மாற்ற வேண்டாம் என்பதற்காக முடிவு செய்து தான் சில கட்டுப்பாடுகளை விதித்தோம். ஒருவேளை ராமரின் பண்பிற்கே சவால் விடப்பட்டால் அதையும் நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்