பாஜக Vs காங்கிரஸ்.. மீண்டும் ஒரு சண்டை... "வியூஸில்" மோடியை மிஞ்சிய ராகுல் காந்தி

Aug 13, 2023,04:20 PM IST
டெல்லி: பாஜக காங்கிரஸ் இடையே மீண்டும் ஒரு குட்டிச் சண்டை நடந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பார்த்தவர்களை விட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சைத்தான் அதிகம் பார்த்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.  இதை வைத்து இரு கட்சியினரும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இரு தலைவர்களில் யார் பாப்புலர் என்ற புதிய சண்டைக்கு இது இட்டுச் சென்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது விவாதம் நடந்தது. காங்கிரஸ் தரப்பில் பேசியவர்களில் முக்கியமானவர் ராகுல் காந்தி. விவாதத்துக்கு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார்.

விவாதத்தை நாடாளுமன்றத்தின் சன்சத் டிவி நேரடியாக ஒளிபரப்பியது. இது சன்சத் டிவியின் யூடியூபிலும் வெளியிடப்பட்டது. இதில்  பிரதமர் மோடியின் பேச்சை விட ராகுல் காந்தியின் பேச்சுக்குத்தான் அதிக வியூஸ் கிடைத்துள்ளதாம். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தகவலில் சன்சத் டிவி ஒளிபரப்பில் ராகுல் காந்தி பேச்சுக்கு 3.5 லட்சம் வியூஸ் கிடைத்தது. அதுவே பிரதமர் மோடிக்கு 2.3 லட்சம் வியூஸ்தான் கிடைத்துள்ளது.



சன்சத் யூடியூப் சானல் வீடியோக்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி பேச்சுக்கு 26 லட்சம் வியூஸ் கிடைத்தது. பிரதமர் மோடி பேச்சுக்கு வெறும் 6.5 லட்சம் வியூஸ்தான் கிடைத்துள்ளது.   டிவிட்டரில் 23,000 பேரும், பேஸ்புக்கில் 73 லட்சம் பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர்.அதுவே பிரதமர் பேச்சுக்கு டிவிட்டரில் 22,000 வியூஸும், 11,000 வியூஸ் பேஸ்புக்கிலும் கிடைத்தன.

ராகுல் காந்தி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு 37 நிமிடங்கள் பேசினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2மணி நேரம் 31 நிமிடங்கள் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.

அதேசமயம், சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தியை விட பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் பாலோயர்கள் அதிகம். கிட்டத்தட்ட 90.9 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். ராகுல் காந்திக்கு 24 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்