ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. ராகுல் காந்தி கடும் கண்டனம்.. நாளை மாயாவதி சென்னை விரைகிறார்!

Jul 06, 2024,05:34 PM IST

சென்னை:   தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை சம்பவம் டெல்லி வரை எதிரொலித்துள்ளது. தேசியக் கட்சியின் தலித் தலைவர் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




தமிழக அரசுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய முறையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.


மாயாவதி சென்னை விரைகிறார்


இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்  உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை மாயாவதியே வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் உழைப்பாளியும், அர்ப்பணிப்புடன்  கூடியவருமான தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு வெளியே கொலை செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


நிலைமையின் தீவிரம், சோகம் கருதி, நாளை காலை நான் சென்னை வருகிறேன்.  ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். அனைவரும் அமைதியைக் கடைப்பிடித்து, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாயாவதி.


இதற்கிடையே பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் ஆம்ஸ்ட்ராங்  உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. அங்கு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்பட்டவுள்ளதாக தெரிகிறது. இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்