மும்பை: மும்பையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.
மணிப்பூரில் தொடங்கிய பாரத் நியாய யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரையை நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் இந்த யாத்திரையை இன்று ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.

இதையொட்டி நிறைவு விழாவில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
சிவாஜி பார்க்கில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனவரி 14ம் தேதி இம்பால் நகரிலிருந்து நியாய யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. 15 மாநிலங்களில் 100 லோக்சபா தொகுதிகள் வழியாக இந்த யாத்திரை மும்பை வந்து சேர்ந்துள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நாட்டின் முதல் பிரதான பொதுக்கூட்டம் என்பதாலும் இதில் தலைவர்கள் பேசப் போவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}