டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அளிவிப்பில், இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? இந்த சூழலில், மேல் நிலை மற்றும் உயர் கல்வியில் பெண்களின் பங்கு 50% ஆக இருப்பது ஏன்? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது? ஏன் இன்னும் 3ல் ஒரு பெண் மட்டுமே பணியில் இருக்கிறார். 10 அரசு வேலைகளுக்கான இடங்களில் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது ஏன்? மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை நடத்தும் அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமாக பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
எனவே, அனைத்து அரசு பணிகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுய மரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள். அரசு பதவிகளில் 50 சதவீத பெண்களை கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தை தரும். சக்தி வாய்ந்த பெண்கள் இந்தியாவில் தலைவிதியை மாற்றுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}