ஸ்வீட் பாக்ஸ் வருமா அண்ணே.. I am waiting.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்கு.. ராகுல் காந்தி கலகல பதில்

Jun 19, 2024,05:17 PM IST

டெல்லி:  காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கு ராகுல் காந்தி பதிலுக்கு கலகலப்பான பதிலைப் போட்டு ரசிக்க வைத்துள்ளார்.


ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது ராகுல் காந்தியின் தீவிரப் பிரச்சாரம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் ஜெயித்துள்ளது. இதற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் அவரது அதிரடியான பிரச்சாரங்களே.




இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி பிறந்தநாளை காங்கிரஸார் உற்சாகமாகக் கொண்டாடினர். பல்வேறு தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது வாழ்த்தில், என் அன்புச் சகோதரருக்கு, நாட்டு மக்களுக்காக நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு உங்களை மிகப் பெரிய உயரத்திற்கு இட்டுச் செல்லும். உங்களது தொடர் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.


முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதில் டிவீட்டில், உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் சகோதரரே.. இன்று உங்களிடமிருந்து  ஸ்வீட் பாக்ஸ் வரும் என்று காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. இந்த டிவீட் கலகலக்க வைத்துள்ளது.


லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவைக்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது ஸ்டாலினுக்கு தருவதற்காக ஒரு ஸ்வீட் கடைக்கு போய் அவரே ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்து கொடுத்து அசத்தினார். இது முதல்வரை நெகிழ வைத்திருந்தது. இதைத்தான் சமீபத்தில்  கூட கோவையில் நடந்த திமுக வெற்றி விழாவில் குறிப்பிட்டு ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸால் பாஜகவினரின் கனவுகளைத்  தகர்த்தவர் ராகுல் காந்தி என்று கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். 


இதைக் குறிப்பிடும் வகையிலேயே இன்று முதல்வருக்கு நன்றி தெரிவித்த டிவீட்டில் ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார் ராகுல் காந்தி. எப்படியும் இன்று இரவுக்குள் ராகுல் காந்திக்கு ஸ்வீட் பாக்ஸ் வந்து சேர்ந்து விடும் என்று நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்