டெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு பணிந்து போவார். அவரது காலக்கெடுவை ஏற்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், குறிப்பிட்ட காலக்கெடுவை நோக்கி நாங்கள் செயல்படவில்லை, தேசிய நலனுக்காகவே செயல்படுகிறோம் என்று கூறியிருந்தார். இதற்குத்தான் கிண்டலாக இப்படி கருத்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
ஜூலை 9-ம் தேதியை வர்த்தக ஒப்பந்தங்களுக்கான கெடுவாக டிரம்ப் நிர்ணயித்துள்ளார். அதுவரை இந்தியாவுக்கு அவர் காலக்கெடு விதித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, போட்டியாளர்களை விட அதிக வரிச் சலுகை பெற முடிந்தால் மட்டுமே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒவ்வொரு நாட்டையும் அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்ற முயற்சித்து வருகிறார். அதில் ஒரு நடவடிக்கையாக சுமார் 100 நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். சில நாடுகளுக்கு அதிகமாகவும், சில நாடுகளுக்கு மிக அதிகமாகவும் வரிகளை விதித்தார். எந்த நாடு தனக்குப் பணிகிறதோ, அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வரிகளைக் குறைத்தார். பின்னர் 90 நாட்களுக்கு அதை நிறுத்தி வைத்தார்.
இதில் அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறிப் போட்டுக் கொண்ட வரி விதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த அவகாசம் செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. இந்தியாவுக்கு 26% பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பிற்கு பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சிறிய ஒப்பந்தம் ஏற்படுமா அல்லது விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது இந்தியாவுக்கு கவலையளிக்கிறது.
விவசாயம் மற்றும் பால் துறைகளின் நலனில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என்று பியூஷ் கோயல் விளக்கியுள்ளார். "மோடி அரசாங்கத்திற்கு விவசாயிகளின் நலன் எப்போதும் முக்கியமானது. நாங்கள் செய்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றார் அவர்.
இதற்குத்தான் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், பியூஷ் கோயல் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் டிரம்ப் விதிக்கும் வரி விதிப்பு கெடுவுக்கு மோடி பணிந்து போவார் என்பதை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதாவது, பியூஷ் கோயல் என்ன சொன்னாலும், டிரம்ப் சொல்வதைத்தான் மோடி கேட்பார் என்பது ராகுல் காந்தியின் கருத்தாகும்.
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
அமெரிக்காவின் காலக்கெடுவுக்கு பிரதமர் மோடி பணிந்து போவார்.. ராகுல் காந்தி பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
One Big and Beautiful bill.. வரி மற்றும் செலவு மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்!
தேவசயனி ஏகாதசி.. சனிக்கிழமை இரவு தொடங்கி.. ஞாயிறு காலை முடியும்!
{{comments.comment}}