டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிய நிலையில் விமானத்தில் பயணம் செய்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் ராகுல் காந்தி.
இதனால் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் சோனியா காந்திக்கு என்ன ஆச்சு என பதறிப் போய் விபரம் விசாரித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லிக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய சோனியாவும், ராகுலும் அவசரமாக விமான நிலையத்தை விட்டு, பலத்த பாதுகாப்புடன் வெளியே சென்றனர்.
இந்த விமானம் எதற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என உடனடியாக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் அவசரமாக தரையிறக்கப்பட்டது என சொல்லப்பட்டது.
26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 26 கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. கூட்டம் முடிந்து, இரவு 09.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சோனியாவும், ராகுலும் டில்லி புறப்பட்டனர்.
இந்த சமயத்தில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விமானத்தில் பயணம் செய்யும் போது ஆக்சிஜன் மாஸ்க் அணிந்த படி சோனியா அமர்ந்திருக்கும் போட்டோவை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதோடு, அழுத்தத்தின் கீழ் கருணையின் உருவம் என கேப்ஷன் வேறு பதிவிட்டுள்ளார். இதற்கு தாறுமாறாக கமெண்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகிறது. சோனியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதா? சோனியாவின் உடல்நிலைக்கு என்ன? என கவலையாக பலர் அக்கறையாக விசாரித்து வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}