டில்லி : பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து, பிரதமர் பதவியை இழந்துள்ள ரிஷி சுனக்கிற்கு, வெற்றியையும் தோல்வியையும் நமது முன்னேற்றத்திற்கானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வழங்கி கடிதம் எழுதி உள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி.
இந்தியாவில் அதிக அளவிலான தோல்விகளைச் சந்தித்த அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். ஆனாலும் ஒவ்வொரு முறை தோற்கும்போதும், அதை அப்படியே புறம் தள்ளி விட்டு அடுத்த வெற்றியை நோக்கி படு வேகமாக ஓடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவரது இந்த விடாமுயற்சியும், வீறுகொண்ட வேகமும்தான் இன்று அவரை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உயர்த்தியுள்ளது. விழுந்து கிடந்த காங்கிரஸ் கட்சியையும் தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அருமையான அட்வைஸ் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.

நடந்து முடிந்த பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் சுனக், பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளார். கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த கிர் ஸ்டார்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய, தமிழ் வம்சாவளி பெண்கள் பலரும் புதிய எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ள ராகுல் காந்தி, தோல்வி அடைந்த ரிஷி சுனக்கிற்கும் ஆறுதல் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்லில் தோல்வி அடைந்ததற்காக என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிகள், தோல்விகள் இரண்டுமே ஜனநாயக பயணத்தில் தவிர்க்க முடியாத அம்சங்கள். இரண்டையுமே நாம் முன்னேற்றத்திற்கானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொது சேவைக்காக உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்காக பொறுப்புடன் செயலாற்றியது ஆகியவை பாராட்டத்தக்கது. இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவை பலப்படுத்த நீங்கள் பிரதமராக இருந்த போது எடுத்துக் கொண்ட முயற்சிகள் மறக்க முடியாதது. பாராட்டத்தக்கது. நீங்கள் தொடர்ந்து பொது வாழ்வில் உங்களின் அனுபவம் வாய்ந்த பங்களிப்பை அளிப்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் வருங்கால முயற்சிகள் மற்றும் வெற்றிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, ரிஷி சுனத் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, தன்னுடைய ஆதரவாளர்களிடைய உரையாற்றிய ரிஷி, தங்கள் கட்சி பெற்ற படுதோல்விக்கு மன்னிப்பு கேட்டதுடன், தேர்தலில் பெற்ற தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}