டெல்லி: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பியாக தொடரவுள்ளதாகவும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கடந்த முறையும் அவர் அபார வெற்றி பெற்றிருந்தார். ரேபரேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முன்பு உறுப்பினர்களாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றார். இதனால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என்பதில் ராகுல் காந்திக்கே குழப்பமாக உள்ளதாம். இரு தொகுதி மக்களும் எனது கடவுள்கள். எனவே இதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று சமீபத்தில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு
இந்த நிலையில், இன்று தனது முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்னர் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய சாதனை படைக்கப் போகும் சோனியா குடும்பம்:
பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. அவர் உ.பி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். அவர் ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அவரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அழைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்று படைக்கப்படும்.
வட இந்தியத் தலைவர்கள் யாரும் தெற்கில் போட்டியிட்டு வென்றதில்லை. சோனியா காந்திதான் அந்த சாதனையை முதலில் செய்தார். கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்தவர் அவர். அதன் பின்னர் அவரது மகன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்காவும் வயநாட்டில் வெற்றி பெற்றால், தெற்கில் போட்டியிட்டு வென்ற முதல் வட இந்திய அரசியல் குடும்பம் என்ற பெருமை சோனியா குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}