சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் வருகை காரணமாக நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதியில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நெல்லை உட்பட ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து,வாக்கு சேகரிக்க உள்ளனர்.
ட்ரோன்கள் பறக்க தடை:
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி, இன்று காலை 6:00 மணி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}