சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது என்பது போல வட மாவட்டங்களையும், தென் கோடி மாவட்டங்களையும் கன மழையும், பெரு வெள்ளமும் வந்து உலுக்கி எடுத்து விட்டன.
இந்த இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டனம், திருமருகல், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றாலத்தில் ஐந்தருவியில் நீர் விழுவது இயல்பாகியுள்ளதால் அங்கு மக்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதேபோல திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதேசமயம், மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் தடை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இல்குரோ ரயில் நிலையப் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடை நீடிக்கிறது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}