சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெட்கை தணிந்து தற்போது குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. அருப்புக்கோட்டை, திருமயம், கோவிலாங்குளத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சுழியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}