சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீர் தேங்கி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்தது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் மக்கள் உடைமைகளையும் பொருட்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகள், ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் மாதத்தில் மழை அதிகரிக்கும்.வடகிழக்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் அதிகமாக பெய்யக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழையே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி
இன்று கனமழை:
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
மிதமான மழை:
தமிழ்நாட்டில் நாளை முதல் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}