இரவு வரை மழை தொடரும்.. பிறகு செங்கல்பட்டிலும், அடுத்து சென்னையிலும் குறையும்.. பிரதீப் ஜான்

Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்யும்.. விட்டு விட்டும், இடைவிடாமலும் பெய்யும். புயல் நமக்கு அருகே இருக்கும் வரை மழையை நாம் தவிர்க்க முடியாது. இரவில் படிப்படியாக மழை குறைய ஆரம்பிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னையை உலுக்கி எடுத்து வருகிறது மிச்சாங் புயலால் பெய்து வரும் அதீத கன மழை. சரமாரியாக பெய்து வரும் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2015 ம் ஆண்டு பெருமழையை தற்போதைய மழை மிஞ்சி விட்டது.


இந்த மழை எப்படா நிற்கும் என்று எல்லோரும் கவலையுடன் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்படியே பெய்து கொண்டிருந்தால் என்னாவது  என்ற கவலை எல்லோருக்கும் வந்து விட்டது. 




இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு வரை இந்த மழை தொடரும். இடைவிடாமலும், விட்டு விட்டு விட்டும் பெய்யும்.  புயல் நமக்கு அருகே இருக்கும் வரை நம்மால் மழையைத் தவிர்க்க முடியாது.


2015ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு சென்னைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய மழை இதுதான். சில இடங்களில் மழைப்பொழிவின் அளவை சரியாக எடுக்க முடியவில்லை. இதனால் சரியான மழைப்பொழிவு அளவு நம்மிடம் இல்லை.


இரவில் மழை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முதலில் செங்கல்பட்டிலும், பிறகு சென்னையிலும் மழை குறையும். அடுத்து நள்ளிரவுக்கு மேல் திருவள்ளூரில் மழை குறையா ஆரம்பிக்கும்.


இதுவரை மீனம்பாக்கத்தில் 415 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது நுங்கம்பாக்கத்தை விட அதிகம். நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் 390 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையில் பிற்பகல் லேசான தொய்வு காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வலுவாக மழை பெய்து வருவதால் நான்கு மாவட்ட மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்