சென்னை : நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதாகவும், இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு பிறகே குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 02.30 வரை பதிவான மழை அளவு குறித்த விபரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை பெய்த மழையை விட 12.30 மணி வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. பகல் 02.30 வரை அதை விட அதிகமாக பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 200 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் 191 மி.மீ.,ரும், நாங்குநேரியில் 186 மி.மீ.,ரும், சேரன்மாதேவியில் 147.80 மி.மீ.,ம், களக்காட்டில் 162.40 மி.மீ.,ம், நம்பியார் அணை பகுதியில் 185 மி.மீ.,ம் மழை பதிவாகி உள்ளது.
திருநெல்வேலியில் 105 மி.மீ.,ம், பாபநாசத்தில் 143 மி.மீ.,ம், அம்பாசமுத்திரத்தில் 131 மி.மீ.,ம் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 90 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை இதோடு நிற்காது என்றும் வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
நாளை காலை இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 300 மி.மீ., க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரேவித்துள்ளார். செவ்வாய்கிழமைக்கு பிறகே மழை குறைய வாய்ப்புள்ளதாகவும். மிக ஆபத்தான மழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}