சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கும் இனி வரும் நாட்களில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மழைக்கால நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை மக்களை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்த வருவதால் மழை தொடர்பான வைரல் தொற்றுகள், டெங்கு, இன்ஃபுளுயன்சா காய்ச்சல், மழைக்காலத்தில் வரும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், வைரல் நோய்கள் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மலேரியா, லெப்டோஸ்பிரோசிஸ் உள்ளிட்ட பல நோய்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவி வருகிறது.

அதிக காய்ச்சல், குளிர், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடல் வலி, தலைவலி இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் 57 சதவீதம் டெங்கு நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், கொசுக்கள் வளராமலும் பார்த்துக் கொள்ளும்படி சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நோய்கள் பரவுகளை தடுக்க டிப்ஸ்...
* காய்ச்சிய தண்ணீரை மட்டுமே குடியுங்கள்.
* வெளியில் சென்று வந்தால் உடனடியாக முகம், கைகளை சோப் போட்டு நன்கு கழுவி விடுங்கள்.
* வைரஸ் எளிதில் உடலில் நுழையக் கூடிய இடங்களான கண், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
* வீட்டு உணவுகள், ஆரோக்கிய உணவுகள், சரிவிகித உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
* இருமல், தும்மல் வரும் போதும் வாய் மற்றும் மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களுக்கும் நோய் பரவால் தடுக்க முடியும்.
* காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்பட்டால், வைரல் நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கூட்டமான அல்லது சுகாதாரமற்ற இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிவது நோய்கள் பரவுவதை தடுக்கும்.
* சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுவதால் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}