கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து போனதற்கு முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று இலங்கை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதாரத்தை சரிவர கையாளாமல், மக்களின் அடிப்படைகளை மீறும் வகையில் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே நடந்து கொண்டதாகவும் கோர்ட் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, நீதிபதிகள் புவனகா அலுவிஹாரே, விஜித் மலகோடா, முருது பெர்னாண்டோ ஆகியோர் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராகவும், நீதிபதி பிரியந்தா ஜெயவர்த்தனா ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும் ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெரும்பான்மையான தீர்ப்பு அளித்துள்ளனர்.
கோத்தபயா ராஜபக்சே தவிர முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கி மானிட்டரி போர்டு, முன்னாள் நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபயா ராஜபக்சே அதிபராக இருந்தபோது பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ. 681 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டதைக் கோர்ட் கண்டித்துள்ளது. அதுதான் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பப் புள்ளி என்று அது கூறியுள்ளது.
சர்வதேச நிதியத்திடமிருந்து விரைவாக கடன் பெறத் தவறியது, இலங்கையின் ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கியதைத் தடுக்கத் தவறியது ஆகியவையும் கூட கோத்தபயா ராஜபக்சே அரசின் மிகப் பெரிய தவறாக சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.
சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர் இணைந்து ராஜபக்சே சகோதரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. மனுதாரர்களுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ. 1.50 லட்சம் நஷ்ட ஈடு தரவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}