கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான்.. அவர் எடுப்பதே இறுதி முடிவு: ராஜேந்திர பாலாஜி!

Jun 27, 2025,03:11 PM IST
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் எடுப்பதே இறுதி முடிவு என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என்றும், இந்த கூட்டணியில் அதிமுகவினர்களுக்கே உடன்பாடு கிடையாது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.



இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார்.  அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல் பேசியிருந்தார் அமித்ஷா.

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று தான் கூறினேன். கூட்டணி அரசு என கூறவில்லை என்று திட்டவட்டமாக முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி தான். கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிச்சாமி தான். கட்சியில் அவர் எடுப்பதே இறுதி முடிவு. அவர் சொல்லுவது தான் எங்களுக்கு கட்டளை. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதனை எங்கள் தலைவர் எடப்பாடி தான் முடிவு எடுப்பார். தவெக- அதிமுக இணைய வாய்ப்புள்ளது. திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சியையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற பணியை எடப்பாடியார் செய்து வருகிறார். எங்கள் தலைவர் எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?

news

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு

news

செல்லமாக வளர்ப்பது தவறில்லை.. செல்லாத செல்வங்களாய் வளர்க்கலாமோ!?

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?

news

அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!

news

ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்

news

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்