டெல்லி: இந்திய ஆயுதப் படையினரின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலை கண்டித்து, இந்தியா பாடம் புகட்டும் விதமாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி இந்திய ராணுவம் மே 7 அதிகாலையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.44 மணி அளவில் ஜெய்ஷ்-இ- முகமது மற்றும் லஷ்கர்-ஈத்- தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை சுமார் 23 நிமிடங்கள் இந்த தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் மீதான தாக்குதலுக்கு 24 ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் குண்டுகளை இந்தியா பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் ஏப்ரல் 22 அன்று Pahalgam-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இருந்தது. அந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் கோபத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்திய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.இந்தியா, இந்திய மக்கள் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுக்கும். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய இந்திய ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போராளிகளின் தாக்குதல் தொடங்கியது. நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் நிற்காது. மொத்த தேசமும் உங்களுடன் (மோடி, அமித்ஷா) நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன்சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்தது. அங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்படுகின்றன." மேலும், இந்தியாவின் இந்த நடவடிக்கை எந்தவிதமான தீவிரவாதத்தையும் தூண்டாத வகையில் கவனமாக திட்டமிடப்பட்டது. எங்கள் நடவடிக்கை கவனம் செலுத்தியதாகவும், அளவானதாகவும், தீவிரமடையாத வகையிலும் இருந்தது. பாகிஸ்தானின் எந்த இராணுவ தளங்களும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!
தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)
கொம்புகள் எல்லாம் வண்ணமாகுமே.. கூரான கொம்பில் சலங்கை ஆடுமே!
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டர் அளவில் பதிவு
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}