"ஜெயிலர்".. எனக்கு மட்டும்தான் இப்படி தெரியுதா.. என்ன செல்வம் சார் இப்படி சொல்லிட்டார்??

Sep 10, 2023,03:43 PM IST

சென்னை: டிவிட்டரில் பிரபலமான அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் வந்து கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.


அப்படி என்ன பண்ணிட்டார் ஆசிரியர் செல்வம்.. ஜெயிலர் பத்தி  போட்ட டிவீட்தான் அது.. அதுதான் காரணம்!


வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வ சிதம்பரம். டிவிட்டரில் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்ற பெயரில் பிரபலமானவர். சிறந்த ஆசிரியராக செயல்பட்டு வருபவர். மாணவர்களுக்கு இவர் ஆற்றி வரும் பல்வேறு சேவைகள் பிரசித்தமானவை, பலராலும் பாராட்டப்பட்டவை.




சமூகம் சார்ந்த கருத்துக்களையும் அவ்வப்போது போடுவார் செல்வம். கூடவே சினிமா பக்கமும் அவ்வப்போது விசிட் அடிப்பார். அந்த வகையில் ஜெயிலர் படம் குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் செல்வம். அதுதான் தற்போது சலசலப்பாகியுள்ளது.


அந்த டிவீட்டில் செல்வம் சொல்லியிருப்பது இதுதான்:


உண்மையில் ஒருகாலத்தில் நான் தீவிர சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். பாட்ஷா இன்று தொலைக்காட்சியில் ஓடினாலும் முழுமையாக பார்த்துவிட்டு கிளம்புவேன். இன்றுதான் ஜெயிலர் பிரைமில் பார்த்தேன். மரண மொக்கை படமாக தெரிவது எனக்கு மட்டும்தானா? . நமக்குதான் ரசனை இல்லாமல் போய்விட்டதா என தெரியவில்லை.


தமிழ் சினிமாவில் கதை , இயக்குநர் வறட்சி ஏற்பட்டு விட்டதா?. ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அது பெரிய பேசு பொருளாகும். (திரும்ப திரும்ப பேசுற நீ மோமெண்ட்). அப்படி மிகப்பெரிய விளம்பர தளத்தை வைத்து வென்றிருக்கிறார்கள். வேறொன்றும் சொல்வதற்கில்லை. என்னை திட்டுவோர் திட்டிக்கொள்ளலாம்.


இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.


இந்த டிவீட்டுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சரமாரியாக கமெண்ட் போட்டு வருகின்றனர். நீங்க ரஜினி ரசிகராக இருந்தால் முதலில் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்திருக்க வேண்டும். அதையும் பார்க்காமல் இப்படி கமெண்ட் போடுவது தவறு என்று பலர் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, படம் மொக்கையாக தெரிவதற்குக் காரணம் உங்களுக்கு வயசாய்ருச்சு. அனிருத் காலத்துக்கு மாற உங்களால முடியலை என்று கிண்டலடித்துள்ளனர்.


செல்வம் சார்.. நமக்கெதுக்கு சார் சினிமா எல்லாம்.. உங்களோட சேவை இன்னும் இன்னும் பல பிள்ளைகளுக்கு தேவை.. அதைப் பார்க்கலாம் வாங்க சார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்