லக்னோ: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வருடா வருடம் இங்கு வரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டது. அங்கு பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று பூஜைகளைச் செய்தார்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைத் தவிர நாட்டின் மற்ற பிரபலங்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள், நடிகர் நடிகையர், துறவிகள் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.
ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், பேரப் பிள்ளைகள் உள்ளிட்டோருடன் வந்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, ரொம்ப நன்றாக இருந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி இது. நான் மிகவும் அதிர்ஷ்டக்காறன். அயோத்திக்கு வருடா வருடம் வருவேன் என்றார் மகிழ்ச்சியாக.
ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் இமயமலைக்குப் போவது வழக்கம். ஜெயிலர் படம் முடிந்த பிறகும் கூட அதையே அவர் செய்தார். அப்படியே வட மாநிலங்களிலும் டூர் அடித்து விட்டு வந்தார். இப்போது அவரது டூர் பட்டியலில் அயோத்தியும் இணைந்துள்ளது. ஒரு வேளை இமயமலை டூரை கட் செய்து விட்டு இனிமேல் அயோத்திக்கு அவர் அடிக்கடி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது, இமயமலை டூருடன் அயோத்தியைும் இணைத்து வட மாநில ஆன்மீகப் பயணமாக அவர் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
ஆக மொத்தத்தில் அயோத்தி, இந்தியப் பிரபலங்களின் புதிய விசிட்டிங் ஸ்பாட்டாக மாறும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}