உ.பி. முதல்வருடன் இன்று "Jailer" ரஜினிகாந்த் சந்திப்பு.. என்ன "பிளான்"?

Aug 19, 2023,10:40 AM IST
சென்னை: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு மேற்கொள்ளவுள்ளார். இருவரும் இணைந்து ஜெயிலர் படம் பார்க்கப் போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் சாதனை படைத்து வருவதாக தகவல்கள் கூறிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் பட ரிலீஸுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் இமயமலை போய் விட்டார். அங்கு  பல்வேறு இடங்களுக்கும் சென்ற ரஜினிகாந்த் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குப் போனார். அங்கு மாநில ஆளுநராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருண்ணனை சந்தித்துப் பேசினார்.



இந்த சந்திப்பைத் தொடர்ந்து லக்னோ சென்றார் ரஜினிகாந்த். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று இரவு 7 மணியளவில் சந்தித்துப் பேசவுள்ளார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஜெயிலர் படம் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, யோகியுடன் இணைந்து ஜெயிலர் படம் பார்க்கவிருப்பதை உறுதி செய்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் வெற்றி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் என்று இந்தியில் பதிலளித்தார்.

இதற்கிடையே, ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கவிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பாஜகவின் முக்கியத்  தலைவர்களில் ஒருவர் யோகி ஆதித்யநாத். 2வது முறையாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று உ.பியின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். வருங்காலத்தில் பிரதமர் பதவிக்கும் கூட இவர் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் உள்ளது. எனவே யோகி - ரஜினிகாந்த் சந்திப்பு, ஜெயிலர் படத்தைத் தாண்டி வேறு மாதிரியான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக கூறி வந்தார். அவரை அரசியலுக்கு இழுக்க பாஜகவும் தீவிரமாக முயன்று வந்தது. நீண்ட இழுவைக்குப் பிறகு தனிக் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த்தே அறிவித்தார். ஆனால் இடையில் கொரோனா குறுக்கிட்டதால் அவர் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார். இருப்பினும் பலமுறை பாஜகவுக்கு சார்பான முறையில் ரஜினியின் செயல்பாடுகள் இருந்ததால், இன்னும் கூட அவரை பாஜகவுக்கு ஆதரவானவராகவே பலரும் பார்க்கிறார்கள். இந்த நிலையில்தான் யோகியை சந்திக்கவுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்