சென்னை: ரஜினிகாந்த் ஒரு ஸ்டைல் மன்னன் என்று உலகுக்கே தெரியும்.. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டைலும் முத்திரை பதிக்கும்.. அந்த வகையில் வேட்டையன் படத்தில் அவர் காட்டிய ஒரு ஸ்டைல் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.. பளிச்சென பலரது மனதையும் உடனே கவர்ந்து விட்டது.
அது.. கூலர் கண்ணாடியை தூக்கிப் போட்டதும் அது போய் அவரரது கண்களில் இருந்த பிரேமில் உட்கார்ந்ததுதான். இந்த ஸ்டைல் இதுவரை அவர் செய்திராதது, சினிமாக்களில் யாரும் செய்து பார்த்திராதது.. ஆனால் இது புதிய மேட்டர் கிடையாது.. ஏற்கனவே இருக்கும் ஒரு புதிய டெக்னாலஜிதான்.. ஆனால் ரஜினிகாந்த் செய்ததால் அது ஸ்டைல் மேட்டராகி விட்டது.
ரஜினி தூக்கிப் போட்டு கண்ணில் உட்கார்ந்தது ஒரு Magentic Eye Glass ஆகும். இது ஏற்கனவே பாப்புலராக உள்ள விஷயம்தான். இந்த வகை கண்ணாடிகளில் பிரேமும், கிளாஸும் தனித் தனியாகவே இருக்கும். தேவை என்றால் கிளாஸை தனியாக எடுத்து விட முடியும். தேவைப்படும் நேரத்தில் பிரேமில் பொருத்திக் கொள்ள முடியும்.

இந்த வகை கண்ணாடிகளின் பிரேமில் இரண்டு பகுதிகள் இருக்கும். அதாவது டாப் பிரேம் மற்றும் பேஸ் பிரேம். இதில் டாப் பிரேமுக்கும், பேஸ் பிரேமுக்கும் இடையே ஈர்ப்பு கிடைக்கும் வகையில் சிறு சிறு காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிகவும் நுன்னிய காந்தங்கள் இவை. இந்த காந்தங்களின் ஈர்ப்பு காரணமாகத்தான் கிளாஸை இதில் பொருத்தும்போது அது கச்சிதமாக பொருந்திக் கொள்ளும்.
இந்த பிரேம் மிக மிக லேசான எடை கொண்டது என்பது இதன் விசேஷமாகும். கண்ணாடியை பிரேமுக்கு அருகில் கொண்டு வந்தாலே அது போய் கச்சிதமாக பிரேமுக்குள் உட்கார்ந்து கொள்ளும். அதற்கேற்ற வகையில் அந்தக் கண்ணாடியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த வகை கண்ணாடியைத்தான் சூப்பர் ஸ்டார் தனது வேட்டையன் படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சொல்வதற்கு இது ஈசிதான்.. ஆனால் ரஜினி தூக்கிப் போட்டது போல போட்டு கண்ணாடியை பிரேமுக்குள் உட்கார வைப்பதுதான் கஷ்டம்.. ஆனால் அது ரஜினிக்கு கண்டிப்பாக கஷ்டம் இல்லை.. அவர்தான் ரஜினி "காந்தம்" ஆச்சே!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}