அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்... ரியாக்ஷன் என்ன ?

Aug 20, 2023,09:01 PM IST

அயோத்தி : ராமஜென்ம பூமியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலை நேரில் சென்ற பார்த்த பிறகு கூறிய கருத்துக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 


டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். ஒரு படம் முடித்த பிறகு இமயமலை சென்று பாபாஜியின் குகையில் தியானம் செய்து, அங்கு ஓய்வெடுத்து விட்டு வருவது ரஜினியின் வழக்கம். பல ஆண்டுகளாக ரஜினி இதை கடைபிடித்து வருகிறார். ஆனால் கொரோனா, அதன் பிறகு ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் ரஜினி இமயமலை செல்லாமல் இருந்து வந்தார். அதற்கு பதில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தனிமையில் தியானத்தில் ஈடுபட்டு, ஓய்வு எடுத்து வந்தார்.




தற்போது உடல்நிலை தேறி, ஜெயிலர் படமும் செம ஹிட் ஆகிய விட்டதால், படம் ரிலீசான கையோடு நீண்ட இடைவெளிக்கு மீண்டும் இமயமலை சென்று விட்டார் ரஜினி. இமயமலையில் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமீப நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இமயமலை பயணத்தை முடித்த ரஜினி, நேராக சென்னை திரும்பாமல் வட மாநிலங்களில் உள்ள பல முக்கிய இடங்களுக்கும் சென்று வருகிறார்.


நேற்று உத்திர பிரதேசம் சென்ற ரஜினி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க அழைப்பு விடுத்தார். ஆனால் யோகி ஆதித்யநாத், ஜெயிலர் படம் பார்க்கவில்லை என சொல்லப்பட்டது. ரஜினி எதற்காக திடீரென உத்திர பிரதேசம் சென்றுள்ளார் என்ற காரணமும் தெரியவில்லை. 




இந்நிலையில் இன்று உத்திர பிரதேசத்தில் ராம ஜென்ம பூமியில் புதிதாக, பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை ரஜினி நேரில் சென்று பார்த்தார். ராமர் கோவில், அந்த கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும் வழித்தடம் ஆகியவற்றை பார்த்த ரஜினியிடம், கோவில் எப்படி இருக்கிறது ? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, இது சரித்திரம். கோவில் திறக்கப்பட்ட பிறகு எப்படி கட்டி இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். உங்களுக்கே அது தெரியும் என பதிலளித்தார்.


பல கோடி செலவில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்திர பிரதேச அரசும், ராமஜென்ம பூமி கோவில் டிரெஸ்ட் கமிட்டியினரும் மிகத் தீவிரமாக செய்து வருகிறது. ரஜினிகாந்த் அயோத்தி சென்று வந்த போட்டோக்களும் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்