சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்து வருகிறது. பனகுடி பக்கம் நடந்த ஷூட்டிங்கிற்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரைப் பார்க்க மக்கள் கூடி விட்டனர்.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளில் ரஜினி தற்பொழுது இறங்கி விட்டார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது தலைவர் 170. இப்படத்திற்கானபூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு படப்பிடிப்பு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, துசாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
பனகுடியில் ஆர் எம் எஸ் ஓடு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். ரஜினி வருகையை அறிந்து ரசிகர்கள் அங்கு கூட்டமாக கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக காரில் வந்த ரஜினி காந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
{{comments.comment}}