சென்னை : விஜய் நடித்துள்ள லியோ படம் பற்றி ரஜினிகாந்த் சொன்ன வார்த்தையால் ரஜினி ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். விஜய் ரசிகர்களே ரஜினியை கொண்டாட துவங்கி விட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதனால் எங்கு திரும்பினாலும் லியோ பற்றிய பேச்சு தான் தீவிரமாக போய் கொண்டிருக்கிறது. லியோ படத்தில் ஃபர்ஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ காலை 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என தமிழக அரசு சொல்லி விட்டது. ஆனால் மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் முதல் காட்சி காலை 5 மணிக்கே திரையிடப்பட்டு விடும். ஏற்கனவே ஜெயிலர் படத்தை தாமதமாக பார்த்த கடுப்பில் இருக்கும் ரசிகர்கள், விஜய் படத்திற்கும் இதே நிலையா என கொந்தளித்து போய் உள்ளனர்.

இதனால் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என லியோ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் அளவிற்கு போய் விட்டனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஐகோர்ட்டும் ஏற்றுள்ளது. இதனால் கோர்ட் என்ன உத்தரவு தர போகிறது? தமிழக அரசு அதனை ஏற்குமா? லியோ ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ வழக்கமான கொண்டாடட்டத்துடன் அதிகாலை 4 மணிக்கே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வேறு, லியோ படத்தில் முதல் 10 நிமிடங்களை யாரும் மிஸ் பண்ணீடாதீங்கள் என சொல்லி உள்ளதால் அப்படி அந்த 10 நிமிடத்தில் என்ன இருக்கும் ஹைப் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் லியோ பட டிக்கெட் ரூ.2500 வரை விற்கப்படுவதாக ஒரு பரபரப்பு தகவல் வேறு போய் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமும், செய்தியாளர்கள் சிலர் லியோ படம் பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, அந்த படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என கூறி விட்டு சென்றார். ஏற்கனவே தமிழ்நாட்டில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை பல வருடமாக போய் கொண்டிருக்கிறது. பலர் ரஜினி இடத்திற்கு வரப் போவது விஜய் தான் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு போட்டியாக யாரும் வர முடியாது என சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினியை தாக்கும் வகையில் விஜய்யின் பல பஞ்ச் டயலாக்குகள் அமைந்துள்ளதால் ரஜினி - விஜய் இடையே பனிப்போர் ஒன்று நடந்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் அரசல் புரசலாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அவர்கள் இடையேயான மோதல் சினிமாவை தாண்டி, அரசியல் என்ட்ரி ரீதியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சமயத்தில் விஜய் படத்திற்கு ரஜினி வாழ்த்து கூறி இருக்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது. பொதுவாக ரஜினி, பெரிய நடிகர்களின் படங்கள் பற்றி பெரிதாக கருத்து கூற மாட்டார். ஒரு சில படங்களை அவர் பார்த்து விட்டு சிலரை போனில் அழைத்து வாழ்த்தியதும் உண்டு. இந்த நிலையில் முதல் முறையாக விஜய் படத்திற்கு, அதுவும் ரிலீஸுக்கு முன்பாகவே ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் லியோ ஃபீவர் தலைவரையும் விட்டு வைக்கல போல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அனேகமாக லியோ படத்தை முதலில் பார்ப்பவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த்தும் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.. காரணம் ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ்தானே இயக்கப் போகிறார்.. யூஸ் ஆகுமல்லவா!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}