ஜெய்ப்பூர்: தனது அரசியல் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இருந்தவர் சோனியா காந்தி. சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்த பெருமைக்குரியவர் சோனியா காந்தி.
1999ம் ஆண்டு முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜை தோற்கடித்து எம்.பி. ஆனார். அதன் பின்னர் தனது மாமியார் இந்திரா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். 5 முறை லோக்சபா எம்.பியாக இருந்துள்ளார் சோனியா காந்தி.
தற்போது 77 வயதாகும் சோனியா காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. காரணம் அவரது உடல் நலம் உள்ள நிலையில் அவரால் தீவிரப் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதால் அவரது குடும்பத்தினரும் ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட முடிவு செய்தார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலின்போது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். நேரு - இந்திரா குடும்பத்தில் ராஜ்யசபாவுக்குப் போன முதல் தலைவர் இந்திரா காந்திதான். அவர் கடந்த 1964ம் ஆண்டு முதல் 67 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது 2வது உறுப்பினராக சோனியா காந்தி ராஜ்யசபா உறுப்பினராகவுள்ளார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வழக்கம் போல கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அவர் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் கடந்த முறை தோல்வியைத் தழுவினார். இந்த முறை அங்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், சோனியா காந்தி போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}