ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

Jun 08, 2026,05:05 PM IST

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.


தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடம் காலியானது. இதனைத் தொடர்ந்து, அந்த ஒரு இடத்திற்கு இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. 


முன்னரே அறிவிக்கப்பட்டபடி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று (ஜூன் 8) மாலை 3 மணியுடன் இந்த அவகாசம் நிறைவடைகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரவீண் சக்ரவர்த்தி உட்பட மொத்தம் 7 பேர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


அடுத்தகட்ட நடவடிக்கைகள்:




தேர்தல் நடைமுறைகளின்படி, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை  நாளை நடைபெறவுள்ளது. இதில் தகுதியான வேட்புமனுக்கள் எவை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக சார்பில் இதுவரை வேட்பாளர் யாரும் அறிக்கப்படவில்லை.


போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு:


தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பலப்பரீட்சையின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான பிரவீண் சக்ரவர்த்திக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. மற்ற சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்படவோ அல்லது வாபஸ் பெறப்படவோ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. 


எனவே, போட்டி இல்லாத சூழ்நிலையில், பிரவீண் சக்ரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்