தங்கை என் தங்கை.. உடையாத அன்பை பறைசாற்றும் ரக்ஷா பந்தன்.. பிரியங்காவுக்கு.. ராகுல் காந்தி வாழ்த்து

Aug 19, 2024,03:07 PM IST

டெல்லி:   சகோதரி பிரியங்கா காந்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உடையாத அன்பை பறைசாற்றும் பண்டிகை ரக்ஷா பந்தன் என தன் சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்களுக்கு கையின் மணிக்கட்டில் மஞ்சள் கயிறு கட்டுவது இப்பண்டிகையின் சிறப்பாகும். இக்கயிறை ராக்கி என அழைப்பர். இந்த ராக்கி கயிறு கட்டியவுடனேயே பெண்களுக்கு தன் சகோதரர்கள் பணம் அல்லது பரிசு வழங்குவது வழக்கம். 




ஒவ்வொரு வருடமும் வட மாநிலங்களில் இப்பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தமிழர்களும் இப்பண்டிகையை இந்து பண்டிகையாக கருதாமல் சமுதாயப் பண்டிகைகளாக எண்ணி கொண்டாடி வருகின்றனர். இன்று அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி பெண்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டும் தினமான ரக்ஷா பந்தன் தினம்  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்த ரக்ஷாபந்தன் தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன்,தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை ரக்ஷா பந்தன். பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என பதிவிட்டு தனது  சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார்.


அதே போல பிரியங்கா காந்தி ராகுல் காந்திக்கு ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும் என பதிவிட்டுள்ளார்.


இதேபோல பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு சிறுமிகள் சேர்ந்து ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரம்மகுமாரிகள் இயக்க சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்