டெல்லி: அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் 9000 ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ல் நடைபெற உள்ளது. ராமருக்கு 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜன்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியா முழுவதும் ராம பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பொருட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விழாவிற்காக அயோத்தி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு மறுநாள் தான் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்தில் மதுபான கடைகள் மாநிலத் திறக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அயோத்தியில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 9000 ரயில் நிலையங்களில் உள்ள தொலைகாட்சிகளின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ரயில்வே துறை முடுக்கி விட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}