சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜா இசையில், மக்கள் செல்வன் ராமராஜன் நடித்த சாமானியன் படத்தின் பாடல்களின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது.
தமிழ் சினிமாவில் நடிகர் ராமராஜன் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர். பிறகு 1986 ஆம் ஆண்டு வெளிவந்த நம்ம ஊரு எங்க ஊரு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஒன்று எங்கள் ஜாதியே என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். 90களில் இவர் பல கிராமிய படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓராண்டுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. ராமராஜன் நடிப்பில்
இளையராஜா இசையமைத்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம்200 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி அடைந்து, அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட் பெற்றது. இவர் நடித்த பல படங்களில் உள்ள பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இவரை புகழ் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இவரை மக்கள் செல்வன் ராமராஜன் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.
இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இவர் நாட்டுப்புற இசை கர்நாடக இசை மற்றும் மேற்கிந்திய இசையில் புலமை பெற்றவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும், ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பில் சாமானியன் படத்தில் இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர்
ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் ராதாரவி, மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
24 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ராமராஜன் படத்திற்க்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சாமானியன் படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆனது.
இதற்கு முன்பு 1999இல் இறுதியாக ராமராஜன் நடித்த அண்ணன் படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}