- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்
என்ன தவம்
செய்தேனோ...
இத்தனை நாகரிக
வளர்ச்சியிலும்...
அதிகாலை
அதிசயங்களை
கேட்பதற்கும்
பார்ப்பதற்கும்
வீட்டைச் சுற்றிலும்
சிட்டுக்களின்
கிரீச்சிடும் ஓசை...
தூரத்தில்
மயில் அகவுது
சோளக் காட்டுக்குள்ள...

சேவல் கூவும்
சத்தங்கள்
ஓயாமல்
அலாரமாய்...
கூடவே
ஐப்பசியென்பதால்
பனிப்போர்த்திக்கிடக்கும்
சாம்பல் பூசணியும்
கொய்யாமரமும்...
தூரத்துல
போதமலை மங்கலாய்
வரைந்திருந்தது...
கோவில் கோபுரத்துலகூட
ஒற்றைமின் விளக்கு
பனியை விழுங்கி
பீத்திக்கொண்டு
மினுக்குகிறது..
வாழைமரமெல்லாம்
உரஞ்சாப்புல
நின்னுக்கிடிருக்க..
வாசல்
தூர்த்து கோலமிடுகையில்
வாகாய்
ஒருசிலகொசுக்களும்
கீதம்பாடி
கடந்து போகுது...
இப்படி
ஒரு அதிகாலையில்!!
நா சுவைக்கும்போது..
இதுதான்
சொர்க்கமடா...
என்கிறது
பாழாய்ப்போன
மனது....
(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)
அவளும் நானே அவனும் நானே
என்ன தவம் செய்தேனோ...!
"டேய் ரஞ்சித், இந்தப் பெயர்?".. அழாதே அனாமிகா (பயணம் 4)
ரூ.50-க்கு அன்லிமிடெட் நைட் டேட்டா : ஜியோவின் புதிய அதிரடி ஆஃபர் அறிவிப்பு
ஜன்னல் .. ஒரு நிமிடக் கதை (64)
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது கலெக்டர் புகார்: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
வசந்தகால நினைவுகள்!
ஆனந்த அன்பு என்றும் கொண்டிடவே.. ஆனந்த தீபம் இன்று ஏற்றிடுவோமே!
கணவர் – உறவுகளின் மொத்த உருவம்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (18)
{{comments.comment}}