சென்னை: காதல் வேடங்களிலும், கலகலப்பான பாத்திரங்களிலும், அழுத்தமான நடிப்பிலும் அசத்தியுள்ள ராஷ்மிகா மந்தனாவை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகிறது.
கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்பத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் என பெயரிட்டஉள்ளனர்.
தெலுங்கு, தமிழ் படங்களில் ஏராளமாக நடித்துப் புகழ் பெற்றவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த புஷ்பா மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. தமிழில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்திருந்தார். தற்போது இந்தியிலும் புகுந்திருக்கிறார் ராஷ்மிகா. இவர்தான் தி கேர்ள் பிரண்ட் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். இவரை சுற்றித்தான் கதை புனையப்பட்டுள்ளது. அதாவது ஹீரோயின் ஓரியன்டட் படமாக இது உருவாகிறது.

ஹீரோயின் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் கூட அனைத்து வயதினரும் என்ஜாய் செய்து இப்படத்தைப் பார்க்க முடியும் முடியும் என்று படக் குழு நம்பிக்கையுடன் சொல்கிறது. தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தேசிய நாயகியாகியுள்ள ராஷ்மிகாவின் வித்தியாசமான நடிப்பில் வரும் தி கேர்ள் பிரண்ட் அனைவரையும் வசீகரிப்பார் என்று நம்பலாம்!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}