கரூர்: டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீக்கடைக்கு சீல் வைத்தது கரூர் நகராட்சி நிர்வாகம்.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகே பாபு டீக்கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த டீக்கடையில் ஒருவர் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடையை சாப்பிட்டவர் வடையில் எலி உள்ளது. அதனை விற்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட டீக்கடைக்காரர் பாபு சின்ன எலிதானே தூக்கிப் போட்டு போங்க பாஸ்.. ஒன்றும் செய்யாது என அலட்சியமாக வடிவேலு பட பாணியில் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், எலி இருந்த வடையை சாப்பிட்ட எலக்ட்ரீசியன் கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எலி இருந்த வடையை சாப்பிட்டவர் பாதிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்கு சீல் வைத்தனர். கடையில் இருந்த வடைகள் அனைத்தையும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் ஊழியர்கள்.
சமீப காலமாகவே உணவு பொருட்களில் பள்ளி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் உணவுப் பொருட்களில் இருப்பது அதிகரித்து வருகிறது. இவற்றினால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரியாணியில் கண்ணாடித் துண்டு கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு அதிக அளவில் நடக்கின்றன. இதனை தட்டி கேட்டாலும் உரிமையாளர்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை எத்தகைய நடவடிக்கை எடுத்து வந்தாலும். அந்த சம்பவங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்து தான் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}