சென்னை : தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில், அதாவது ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணிகளுக்கு சுமார் 3280 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாவட்ட வாரியாக காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர் காணல் மட்டும் தான். இந்த நேர்காணலும் விண்ணப்பதாரர் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கானதாகவே இருக்கும். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியங்கள் வழியாக தான் தமிழ்நாடு அரசு இந்த மாவட்ட வாரியாக காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொதுவான இணையதளம் கிடையாது. மாவட்ட வாரியான இணையதளங்கள் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அவரவர்களின் மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். அல்லது district recruitment bureau என கூகுளில் டைப் செய்து, அதற்கு பக்கத்தில் விண்ணப்பதாரர் சார்ந்த மாவட்டத்தை டைப் செய்து தேடினால் நேரடியாக அந்தந்த மாவட்டத்தின் பக்கத்திற்கு செல்லும். அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையை சேர்ந்தவர்கள் https://www.drbchn.in/ என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 138 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 09ம் தேதியே துவங்கி விட்டது. நவம்பர் 07ம் தேதி தான் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் 50 கேபி அளவிலான பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 50 கேபி அளவிலான கையெழுத்து, 200 கேபி அளவிலான சாதி சான்றிதழ், 200 கேபி அளவிலான கல்வி சான்றிதழ், 200 கேபி அளவிலான குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}