ராஞ்சி: எல்லோருக்கும் ரசிகர்கள் இருக்கலாம்.. ஆனால் "தல" தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எல்லாம் வேற மாதிரியானவர்கள்.. வெறித்தனமாவர்கள்.. அவங்க ஆட்டத்தோட லெவலே வேற.. கூட விளையாடும் வீரர்களே, முதலில் தோனிக்கு ரசிகர்கள், பிறகுதான் பிளேயர்கள்னா பார்த்துக்கங்க.
அப்படிப்பட்ட வெறித்தனமான தோனி ரசிகர்களில் ஒருவர்தான் நம்ம ரவீந்திர ஜடேஜா. விளையாட வந்தது முதலே அவர் தோனியின் செல்லப் பிள்ளையாகத்தான் வலம் வருகிறார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த இருவரும் சேர்ந்து குவித்த சாதனைகளை பெரிய சைஸ் கோணிப்பையில்தான் அள்ளிக் கொண்டு வந்து கொட்ட முடியும்.. அம்புட்டு அலப்பறைகளைச் செய்துள்ளனர் இருவரும்.

தோனியைப் பார்த்தாலே ஜடேஜா பரவசமாகி விடுவார். பக்திமயமாகி விடுவார். "அண்ணே" என்று பாசத்தைப் பொழிவார்.. அவ்வளவு மரியாதையும், அன்பும் வைத்திருப்பவர் ஜடேஜா. இந்த நிலையில் ராஞ்சியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட ஜடேஜா அப்படியே தோனி வீட்டுக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார்.
அப்போது தோனி வீட்டு கேட் முன்பு நின்று கொண்டு போட்டோ எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போட்டுள்ளார் ஜடேஜா. வழக்கமாக ரசிகர்கள்தான் இதுபோல படம் எடுத்துப் போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்.. கிட்டத்தட்ட அதே மாதிரியான சந்தோஷத்தை ஜடேஜா வெளிப்படுத்தியுள்ளார். ஜாம்பவான் வீட்டு கேட் முன்பு நின்று போஸ் கொடுப்பது செம ஜாலியாக இருக்கிறது என்றும் கேப்ஷன் போட்டுள்ளார் ஜடேஜா.
இந்தப் புகைப்படம் இப்போது காட்டுத் தீ போல தோனி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தலைவா தலைவா என்று பலரும் சந்தோஷத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

2023 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் தோனி விளையாடினார். உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் விளையாடினார். குறிப்பாக இறுதிப் போட்டியில் ஜடேஜா அட்டகாசம் செய்து விட்டார். அபாரமாக ஆடிய ஜடேஜா கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு போர் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்ததை யாருமே மறக்க முடியாது. போட்டி முடிவில் தோனியை நோக்கி ஓடி வந்த ஜடேஜா, அப்படியே தோனியை அலேக்காக தூக்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஐபிஎல் தொடரிலும் இருவரும் இணைந்து அசத்தவுள்ளனர். அனேகமாக இந்தத் தொடரே தோனிக்கு கேப்டனாக, வீரராக கடைசி தொடராக இருக்கும் என்று பேசப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்கவுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}