வாய்ப்பே இல்லை.. சசிகலாவிற்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது.. ஆர்.பி.உதயகுமார்

Jul 18, 2024,03:59 PM IST

மதுரை:   சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


அதிமுகவினரை சந்திக்கும் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். தென்காசியில் நேற்று இந்தப் பயணம் தொடங்கியது. இதற்கு பெருமளவில் தொண்டர்கள் திரண்டதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயக்குமார் பேசும்போது,  தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். தி அயன் மேன் ஆப் தமிழ்நாடு எடப்பாடி பழனிச்சாமி.




கறந்த பால் மடி புகாது. கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. அதிகாரம் கையில் இருந்த போது சசிகலா தான் சார்ந்த சமூகத்திற்கும் ஒன்றும் செய்யவில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா? தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலா தான் காரணம். உள்ளடி வேலைகள் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது.


சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா? சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போது தான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம்.


33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழி நடத்தியதாக கூறிக் கொள்ளும் சசிகலா, அவர் சார்ந்த சமூகத்தினருக்கு  செய்த நன்மை என்ன?  தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தானே வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்