RBI Explains.. ரூபாய் நோட்டில் இந்த குறியீடு இருந்தால் கள்ள நோட்டா?

Jul 28, 2023,09:39 AM IST

டெல்லி : ரூபாய் நோட்டுக்களின் சீரியல் நம்பர்களில் ( * ) குறியீடு இருந்தால் அது கள்ளநோட்டு என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி, பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

( * ) குறியீட்டுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள். இந்த நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்ப துவங்கி விட்டனர். இதனையடுத்து ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த குறியீடு வெறும் நம்பர் பேனல் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இது கள்ளநோட்டு கிடையாது. 



பழுதடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு, புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் மக்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டு வருகிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட100 தாள்கள் கொண்ட ரூபாய் கட்டில் ( * ) குறியீடு இருந்தால் அவை புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என்று அர்த்தம். அதனால்  ( * )  குறியீட்டுடன் இருக்கும் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்று தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது செல்லத்தக்கது தான். 

மற்ற ரூபாய் நோட்டுக்களில் எப்படி சீரியல் நம்பர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் தான் புதிய நோட்டுக்களில் எண்களுக்கு பதிலாக ஸ்டார் சிம்பல்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீடு இருந்தால் அது புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என அடையாளம் கண்டு கொள்ளலாம். 

ரூ,2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாலிமென்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றன. கருப்பு பணத்தை  ஒழிக்கிறேன் என்ற பெயரில் உயர் பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்று வருகிறீர்கள். ரூ.2000, ரூ.1000 நோட்டுக்களை திரும்பப் பெற்று விட்டீர்கள். அடுத்து உயர் பண மதிப்பு கொண்டது ரூ.500 தான். அதையும் திரும்ப பெறும் அரசுக்கு உள்ளதா? கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்