இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது தெரியுமா?

Aug 02, 2023,10:52 AM IST
டெல்லி : இதுவரை எவ்வளவு ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்ற விபரத்தை மத்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. 

எந்த காரணத்திற்காக ரூ.2000 நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதோ அந்த முயற்சி 88 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாகவும் ஆர்பிஐ தரப்பு சொல்கிறது.



கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் பண மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்து வருகிறது. ஏற்கனவே 2018 ம் ஆண்டு ரூ.500, 1000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் கண்டிப்பாக தெரிவித்து விட்டது.

இந்நிலையில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. ஜூலை 31 ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஜூலை 31 வரை 0.42 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 19 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்து குறைந்திருந்தது. 

இதுவரை கிடைத்த புள்ளி விபரங்களின் படி புழக்கத்தில் இருந்த 88 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன. இதுவரை பெறப்பட்ட ரூ.2000 நோட்டுக்களில் 87 சதவீதம் தொகை டெபாசிட்களாக திரும்ப வந்துள்ளதாகவும், மீதமுள்ள 13 சதவீதம் மட்டுமே வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்