சென்னை: புதுசா எடுக்கும் படங்களை ஓட விட்டு லாபம் பார்ப்பது மிகப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதற்காக என்னென்னவோ செய்து பார்க்க வேண்டியுள்ளது என்பதாலோ என்னவோ, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் உருவாக ஆரம்பித்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்த அல்லது ஹிட் அடிக்க தவறிய, அதே சமயம் மக்களால் நல்ல விமர்சனங்களை பெற்ற படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யும் ரெண்டே அது.
சமீபத்தில் பல கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. குறிப்பாக கமலஹாசன் பிறந்த நாளை ஒட்டி விருமாண்டி படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். சில நாட்களை ஓடினாலும் கூட அந்த படம் பெரும் அளவு வரவேற்பு பெற்றது. அதேபோல ரஜினி நடித்த சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்த நிலையில் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய படங்களை ரீலீஸ் செய்யும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் முக்கிய அம்சமாக கமலஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்ற அதாவது வித்தியாசமான தொழில்நுட்ப படைப்பு என்று பாராட்டப்பட்ட ஆளவந்தான் படத்தை சற்று புதுப்பித்து, லேசாக திரைக்கதை மாற்றம் செய்து அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தானு வெளியிட உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளவந்தான் படம் வெளியான போது, அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த அளவுக்கு இல்லை. இருப்பினும் புதிய உத்திகளை கையாண்டு அந்த படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது அந்த சமயத்தில் யாருக்கும் புரியாத ஒரு தொழில்நுட்பமாக இருந்ததால் படம் சரியாக போகவில்லை. ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் ஆளவந்தானில் அன்று செய்த அத்தனை மாயாஜாலங்களும் மக்களை இப்பொழுது ஆச்சரியப்படுத்துகின்றன. எனவே ஆளவந்தான் இப்போது வெளியாகும் போது மக்கள் அதை மிகுந்த உணர்வோடு ரசித்துப் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இதே போல பல்வேறு புகழ்பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகிறது. வரும் நாட்களில் பல்வேறு கமலஹாசன், ரஜினிகாந்த் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற முன்னணி நடிகர்கள் நடித்த சில மாஸ் ஹிட் படங்களும் கூட மீண்டும் வெளியாக கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரி அவங்க திரையிடுவது இருக்கட்டும்.. எந்தப் படத்தை இப்போது போட்டால் செம ஹிட்டாகும் என்று நீங்க நினைக்கறீங்க.. உங்க லிஸ்ட்டை எடுத்து விடுங்க பார்ப்போம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}