சந்திரயான் 3 விண்ணில் ஏவ ஜூலை 14 ஐ இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?

Jul 14, 2023,12:07 PM IST
டெல்லி : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜூலை 14, பகல் 02.35 மணியை இஸ்ரோ தேர்வு செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை இன்று விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று விண்கலத்தை செலுத்த தேதி முடிவுசெய்யப்பட்டது குறித்த விளக்கம்  ஒன்று வெளியாகியுள்ளது.



இது குறித்து இந்திய விண்வெளி ஆய்வாளர் அமன் குமார் கூறுகையில், இந்த நேரத்தில் தான் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும். அதிகமான எரிபொருள் நிரப்பும் கொள்ளளவு கொண்டிருந்தாலும் சந்திரயான் 3, சந்திரனை அடையும் காலம் மிக குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இஸ்ரோ டீம் இந்த நாளை தேர்வு செய்துள்ளது. 

குறுகிய காலத்தில் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படுவதால் எரிபொருள் குறைந்த அளவே தேவைப்படும். ஜூலை 3 தான் நமக்கு பெளர்ணமி வந்தது. அதாவது பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயம். இதனால் பூமியை நிலவு நெருங்கும் காலம் சந்திரயான் 3 ஐ செலுத்த சரியாக நேரம் என கணிக்கப்பட்டது. 

அதே போல் சந்திரயான் 3 நிலவில் நிலை நிறுத்தப்படும் ஆகஸ்ட் 23 - 24 தேதியும் நிலவும், பூமிக்கு அருகில் வரும் காலமாகும். நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக இந்த திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. 

இனி அடுத்தடுத்த கட்ட திட்டங்கள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்