கரைபுரண்டோடும் தாமிரபரணி.. நெல்லையை சூழ்ந்த வெள்ளம்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Dec 17, 2023,06:53 PM IST

திருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் நெல்லையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.


வங்கடக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களிலும், சென்னையில் பெய்ததை போல் பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் தொடர்ந்து கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீராவரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பகல் 2 மணி வரை 15,000 கனஅடி நீரும், மாலை 4 மணிக்கு மேல் 30,000 கனஅடி நீரும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழையால் ஊரே வெள்ளக்காடாகி உள்ள நிலையில் தற்போது ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ளநீரும் ஊருக்குள் வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.  அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்த படி உள்ளதால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இதற்கிடையே, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இங்கு 21 செமீக்கும் மேற்பட்ட அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேய் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் அபாயகரமான அளவுக்கு தண்ணீர் கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்