சென்னை: தமிழ்நாட்டில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கோடைக் காலமான அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்பதால் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிக்கு அப்பால் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Moconaa Falls.. எங்கடா இங்க இருந்த நீர்வீழ்ச்சியைக் காணோம்.. ஆற்றில் மறையும் அதிசயம்!!
எங்கே என் சொந்தம்?
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
{{comments.comment}}