- தேவி
"இதயத்தின் அழுத்தத்தை
இனிமையான குரலால் வருடி லேசாக்கி
காதலர்களின் தனிமையை
மென்மையான குரலால் தழுவி தாலாட்டி
உண்மையின் மகிமையை
அழகான குரலால் பரவி பாராட்டி
பூந்தென்றலை மனதில் பரப்பி.. என்றென்றும் வீசியபடி"
மறைந்தாலும் இன்றும் நம்முடைய காதுகளையும், இதயங்களையும், வசீகரித்து, சந்தோஷப்படுத்திக் கொண்டே இருக்கிறது... எஸ்பிபியின் தேன் அமிர்தக் குரல்.
எஸ்பிபியின் குரலுக்கு தனி வசீகரம் இருந்தது. அவரது குரல் அதைக் கேட்கும் ஒவ்வொரு உள்ளத்தையும் வசீகரித்தது, ஆற்றுப்படுத்தியது, அமைதியாக்கியது, துள்ள வைத்தது, துவள வைத்தது.. தூங்க வைத்தது!
குறிப்பாக அவரது காதல் பாடல்கள்.. வேற லெலவல் உணர்வுகளைக் கொடுத்தவை அவை.. காதலின் ஆழத்தை அழகான தனது மெல்லிசை குரலால் தத்ரூபமாக வெளிப்படுத்தியவர் எஸ்பிபி. காதல் உணர்வுகளை உள்ளத்தில் தூண்டி, உறவுகளை இணைக்கும், உணர்வுகளைப் பிணைக்கும் தனித்துவமானது இவரது வசீகரமான மெல்லிசை குரல்.
என்ன சோர்வு இருந்தாலும் போதும், இவரது பாடல்களைக் கேட்டாலே போதும், இதயத்தை ஆட்கொள்ளும் குரலுக்கு சொந்தக்காரரும் இவரே. இனிமையான குரல் வளத்தால் பாடல்களின் வரிகளில் வாழ்ந்து அதை மற்றவர்களின் பார்வையில் காட்சிப்படுத்துபவர் என்பதை எவராலும் மறுக்கவே முடியாது. தூக்கம் இன்றி இரவை வெறுக்கும் இதயங்களுக்கு இவரது குரலே மருந்தாக இருந்த காலமும் உண்டு..இன்றும் அதுதான் நட்கிறது.
தன்னுடைய வசீகரமான குரலால் அனைவருடைய மனதிலும் பூங்காற்றாய் வீசி இதழ்களில் புன்னகை மலரை பூக்க வைத்தவர். மனித உறவுகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தது இவரது உயிரோட்டமான குரல் வளமையே. காதலர்களின் தூதாக இருப்பதும் இவரது மெல்லிசை குரலே.
"உலக வாழ்க்கை நடனம்.. நீ ஒப்புக் கொண்ட பயணம்.. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே.. வருது வருது அட விலகு விலகு.. நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா.. நேத்து ராத்திரி அம்மா தூக்கம் போச்சுடி அம்மா... வண்ணம் கொண்ட நிலவே வானம் விட்டு வாராயோ"... ஒவ்வொரு பாட்டும் ஒரு ரகம்... ஒவ்வொரு விதம்.. எல்லாவற்றையும் பாடியது ஒரே குரலா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒவ்வொரு உணர்வாக மாறி மாறி வாழ்ந்து பாடியவர் எஸ்பிபி.
இல்லற வாழ்க்கையின் எதார்த்தமான உண்மையை சொல்லும் "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாடல் இன்றளவும் திருமண விழாக்களில் ஒலித்து அவரவர் திருமண வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது. மறைந்த காதல் உணர்வுகளை தூண்டிவிடும் "காதலின் தீபம் ஒன்று"பாடலை பேருந்து பயணத்தில் கேட்டு தன்னை மறந்து நினைவுகளால் மனதுக்குள் கூத்தாடும் உள்ளங்களும் உண்டு. நிலை தடுமாறும் இதயங்களுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் மருந்தாக இருக்கும் இவரது "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்" என்ற பாடலில் இவரது குரல் இனிமை.!
வரிகளுக்கு தக்கவாறு தனது தேன் இனிக்கும் குரலால் தத்ரூபமாக வேறுபடுத்தி காட்டியவர் எஸ்பிபிதான். நினைவு உள்ளவரை மனிதர்களின் மனதில் காதல் பூத்துக் கொண்டே இருக்கும், அதுபோலவே உலகம் உள்ளவரை இசையின் மடியில் தவழ்ந்து இதயத்துக்கு இதம் அளித்துக் கொண்டிருக்கும் எஸ்பிபியின் குரல் இனிமை .. உலகம் வாழும் வரை அதுவும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.!
எஸ்பிபி மறைந்து.. ம்ஹூம்.. அப்படி சொல்லக் கூடாது.. எஸ்பிபி இசையாக மாறி இன்றோடு 3 வருடங்களாகிறது.. என்றென்றும் அவர் வாழ்வார்!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}