தக்காளி போயி அரிசி வந்தது டும் டும் டும்.. கன்னத்தில் கை வைத்த இல்லத்தரசிகள்.. விலை கிடு கிடு!

Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் கிடுகிடுவென  உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.


பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. விலை ஏற்றம் ஒரு பக்கம் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. மற்றொருபுறம் வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இதனால்,  பொதுமக்கள் செய்வது அறியாமல் திகைத்து உள்ளனர். 




இந்நிலையில், அரிசி விலையும் உயர்ந்துள்ளது மேலும் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. கர்நாடக மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி விலை உயர்ந்து வருகிறது.கடந்த நான்கு மாதங்களில் படிப்படியாக இட்லி அரிசி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயும் சாப்பாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் முதல் 14 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல  மாவட்டங்களில்  கடந்த நான்கு மாதங்களில் 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி விலை 300ல் இருந்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


வெளி மாநிலங்களில் அரிசியின் விளைச்சல் குறைந்துள்ளதால் ஒருபுறம் விலை அதிகரித்து வரும் நிலையில், மிச்சாம் புயல் காரணமாக தமிழகத்திலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு காரணங்களினால் அரிசி விலை உயர்ந்தது. அந்த விலை மீண்டும் தற்போது கிடுகிடு என உயர்ந்து வருகிறது.


வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அரிசி விலை ஒரு கிலோவுக்கு பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




இந்த விலை ஏற்றம், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிகுந்த கவலை கொள்ளச் செய்துள்ளது.இந்த விலை ஏற்றத்தை  கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்  கூறியுள்ளனர்.டெல்டா மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந்ததால் அரிசி விலை அதிகரித்ததாக வணிகர்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கடுமையாக உயர்ந்து மக்களை அதிர வைத்தது.. தக்காளி கெட்ட கேட்டுக்கு இந்த விலையா என்று பலரும் கடுப்பாகினர். பின்னர் அது மட்டுப்பட்டு நாா்மல் ஆனது. இப்போது அரிசியின் டர்ன் போல.. அது எப்ப குறையப் போகுதோ!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்