அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன், அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவபா ரவீந்திர ஜடேஜா கத்தியுடன் சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. இதே அகமதாபாத் மைதானத்தில்தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்தார். ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில் அவரது மனைவி ரிவபா டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் போட்டுள்ளார். அதாவது கத்தியுடன் ரிவபாவும், அவரது கணவர் ஜடேஜாவும் இருக்கிறார்கள். கத்தியை எப்படி சுத்துவது என்று ரிவபாவுக்கு, ஜடேஜா சொல்லிக் கொடுப்பது போலத் தெரிகிறது.

குஜராத்தில் பிரபலமானது இந்த கத்தி டான்ஸ். மெர் சமூக மக்களிடையே இது பாப்புலரானது, இது அவர்களது கலாச்சாரமும் கூட. ஜடேஜா கூட தனது திருமண விழாவின்போது கத்தி சுற்றி டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார். அப்போது அந்த வீடியோ படு வேகமாக வைரலானது. இந்த நிலையில் கத்தி சுற்றிக் காட்டி பயிற்சி கொடுத்தாரா அல்லது இருவரும் சேர்ந்து ஆடுவதற்கான முன்னோட்டமா இது என்று தெரியவில்லை.
இந்தப் புகைப்படத்தைப் போட்டு, மகுடம் முக்கியமில்லை.. கத்திதான் முக்கியம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரிவபா. இதன் மூலம் அவர், உலகக் கோப்பையை வெல்லாதது முக்கியம் இல்லை.. சூப்பராக சண்டை செய்தோம்ல.. அது போதும் என்று ஆறுதலாக சொல்லியுள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விளக்கம் தருகிறார்கள்.
அதுவும் சரித்தான்..!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}